பிளஸ் 2தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. இதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகளை 24ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்த்து கையெழுத்திட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், 25ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
அதன்படி பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு, இன்று நேரடியாக வந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், கொரோனா தடுப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு, சென்று மதிப்பெண் பட்டியலை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
0 Comments