நீண்ட நாட்களுக்குப் பிறகு அமேசான் திருவிழா வருகிறது Amazon Prime Day 2020

நீண்ட நாட்களுக்குப் பிறகு அமேசான் திருவிழா வருகிறது Amazon Prime Day 2020

அமேசானில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு ஆஃபர் என்பது குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முறையாவது சிறப்பு ஆஃபர்களை அறிவிக்கும். அமேசான் கிரேட் இந்தியன் சேல், அமேசான் சம்மர் சேல், ஹோலி சேல், புத்தாண்டு ஆஃபர், சுதந்திர தின ஆஃபர் என பலவிதமான ஆஃபர்களை அறிவித்து வரும். ஆனால், இந்தாண்டு புத்தாண்டு, குடியரசு தினத்திற்குப் பிறகு பெரிதாக எந்த ஆஃபரும் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இதனால் அடுத்ததாக ஆஃபர்கள் எப்போது வரும் என்று அமேசான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது அமேசான் பிரைம் டே ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விற்பனை, வரும் ஆகஸ்ட் 6-7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது. பிரைம் டே ஆஃபர் என்பது அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான். இருப்பினும், புதிய வாடிக்கையாளர்களும் பிரைம் சந்தாவைச் செலுத்தி இந்த ஆஃபர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பிரைம் டே ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாட்ச், அன்றாட தேவைகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.

அமேசான் பே கணக்கு மூலம் பொருட்கள் வாங்கினால், 2,000 ரூபாய்க்கான கூடுதல் சலுகைகளும் உண்டு. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. இது அமேசானின் நான்காவது பிரைம் டே ஆஃபர் ஆகும்.

Post a Comment

0 Comments