கோரோனோவை விரட்ட நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வழிமுறைகள் - சென்னை மாநகராட்சியின் புதிய உத்திகள்

கோரோனோவை விரட்ட நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வழிமுறைகள் - சென்னை மாநகராட்சியின் புதிய உத்திகள் 
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துளளது.

கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவது போன்றவற்றை செய்ய வேண்டும் என அரசு அறிவிறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களை செய்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி காலை ஒரு வேளை கபசுர குடிநீர் பருக வேண்டும்

அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்

உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மாலை என இருவேளை வாய் கொப்பளிக்க வேண்டும்.

துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீராவி பிடிக்க வேண்டும்.

மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இரு வேளையும் பருக வேண்டும்.

இவை இல்லாமல் மூலிகை டீ மற்றும் வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

அன்னாச்சி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்

தினமும் 15 முதல் 20 நிமிடம் காலை 7.30மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரியக் குளியல் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுளளது.

Post a Comment

0 Comments