ஹேர் டை போடாம இளநரையை விரட்ட சில வழிமுறைகள்

ஹேர் டை போடாம இளநரையை விரட்ட சில வழிமுறைகள்
   முடியின் நிறம் கருப்பாக இருக்க என்ன செய்யணும் என்பது தான் கூந்தல் குறித்த மிகப்பெரிய கேள்வியாக எல்லோருக்கும் இருக்கிறது. இளநரை பிரச்சனைக்கு தீர்வு என்று ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. இளநரை வந்தாலே முடியை கருமையாக்கிட செய்ய வேண்டியது ஹேர் டை என்று தான் பலரும் நினைக்கிறார்கள். உடனே தாமதிக்காமல் அதை செய்யவும் தொடங்குகிறார்கள். அதற்கு அவர் தேர்வு செய்வதும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டையாகவே இருக்கிறது. தற்போது இயற்கை அழகு பராமரிப்புக்கு மாற விரும்பினாலும் கூந்தலில் உண்டாகும் நரைக்கு ஹேர் டை மட்டும் இயற்கையை தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இவை மிகச்சிறந்த பாதுகாப்பும், பக்கவிளைவும் உண்டாக்காது என்றாலும் இதன் பலன் வெகு நாட்கள் பயன்படுத்திய பிறகே கிடைக்கும். என்பதால் இந்த பராமரிப்பு பலரும் விரும்புவதில்லை. டை போடாமல் இந்த ஒரு பராமரிப்பு செய்வதால் இளநரை பிரச்சனை தீர்க்கலாம். என்னவென்பதை தெரிந்துகொள்வோம்.

எலுமிச்சை பொடி
    எலுமிச்சை தோலை சிறுதுண்டுகளாக நறுக்கி காயவைடக்கவும். நிழலில் உலர்த்தி உரலில் இட்டு பொடித்து மிக்ஸியில் பொடியாக்கி சலித்தெடுக்கவும்.இதை சருமம் முதல் கூந்தல் வரை அனைத்துக்கும் பயன்படுத்தலாம். ஆறு மாதங்கள் வரை பொடி கெடாமல் இருக்கும். எலுமிச்சை குளிர்ச்சி என்று சொல்வார்கள். ஆனால் எலுமிச்சையை பொடி செய்து பயன்படுத்தினால் அவை குளுமை உண்டாக்காது. எல்லாவயதினருக்கும் இவை நன்மை தருபவை. கூந்தல் உஷ்ணத்தை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்ககூடியவை.
​பீட்ரூட் பொடி
  பீட்ரூட்டை தோல் சீவி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி நிழலில் உலர்த்த வேண்டும். சாறு வெளியேறாமல் அப்படியே அதில் தங்கி காய தொடங்கும். பிறகு அதை சிறுதுண்டுகளாக நறுக்கி இடித்து மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். இந்த பொடியை சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பொடியை அதிகபட்சம் ஒரு மாதம் மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும். மிக்ஸியில் பொடித்து பீட்ரூட் துண்டுகளை பொடியாக்கி சலித்து மீண்டும் உலர்த்தி ஈரமில்லாமல் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அதில் சிறு சிறு கட்டிகள் உருவாகி வீணாககூடும். அதனால் கண்ணாடி பாட்டிலில் வைக்கவேண்டும்.

​நெல்லி பொடி
    நெல்லி பொடி நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். பொதுவாக இயற்கை ஹேர் டை பயன்படுத்தும் போது இவை அனைத்தையும் கலந்து ஒரு நாள் முழுக்க ஊறவைத்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இவை ரெடிமேடாக பயன்படுத்தகூடிய பொருள் என்பதால் இதை எப்போதும் வீட்டில் வைத்திருப்பது நல்லது. நெல்லியை கொட்டை நீக்கி உலர வைத்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம். இவையும் ஆறுமாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தக்கூடியதே. தினமும் அல்லது எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த பொடியை 10 நிமிடங்கள் பயன்படுத்தினாலே போதுமானது. இளநரைக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும்.

​தயாரிப்பு முறை
தலைக்கு குளிக்கும் போது அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே அனைத்து பொடிகளையும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து டீத்தூள் சேர்த்து வடிகட்டிய நீரில் கலக்கவும். இதை கூந்தல் முழுக்க தடவ வேண்டும். அதிக நேரம் ஊறவேண்டியதில்லை. 15 நிமிடங்கள் போதுமானது. பிறகு வழக்கம் போன்று மைல்டான ஷாம்பு கொண்டு அலசினால் முடி கருமையாக இளநரை இல்லாமல் இருக்கும்.

இதை இளநரை இல்லாதவர்களும் பயன்படுத்தலாம். எல்லா காலங்களிலும் குளுமை வருமே என்று நினைக்காமல் பயன்படுத்தினால் நிச்சயம் இளநரை வராது. அதோடு கூந்தல் வளர்ச்சியும் தடையில்லாமல் இருக்கும். கூந்தல் கருமையாக அடர்த்தியாக இருக்கும்.

Post a Comment

0 Comments