மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கும் முதன் முறையாக பட்டியல் வெளியீடு. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவத்தில் முதன் முறையாக இட ஒதுக்கீடு. அரசு ஓதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3650 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு.
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் -
திருப்பூர் ஸ்ரீஜன் முதலிடம்:
710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஜன் முதலிடம்.
705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரபா 2ம் இடம்.
சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3ம் இடம்.
7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல்:
1. ஜீவித் குமார் 664, சில்வார்பட்டி, தேனி
2. அன்பரசன், 644, கள்ளக்குறிச்சி
3. திவ்யதர்ஷினி, 620, சென்னை
4. குணசேகரன், 562, வேலூர்
5. பூபதி, 559, ஈரோடு
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 18-ம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பாதுகாப்பான இடைவெளியுடன் கலந்தாய்வு நடைபெறும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
0 Comments