பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இப்போது பிரான்சிலும்
நுழைந்துவிட்டதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸை இன்னும் கட்டுப்படுத்த
முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், பிரித்தானியாவின் தலைநகரான லண்டன்
மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது.
இது 70 சதவீதம் தீவிரமாக இருப்பதால், இந்த நோய் மற்ற நகர்களுக்கு
பரவிவிடக் கூடாது என்பதற்காக லண்டன் மற்றும் சில பகுதிகளில் கடுமையான ஊரடங்கு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் பல பிரித்தானியாவுடனான விமான
சேவையை தற்காலிகாக தடை செய்துள்ளன. இருப்பினும் பிரித்தானியாவில் இருந்து வேறொரு
நாட்டிற்கு சென்ற சிலருக்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதாக
கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, பிரித்தானியாவில் வசித்து வரும் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த நபர், கடந்த 19-ஆம் திகதி தலைநகரான லண்டனில் இருந்து பிரான்சின்
Tours பகுதியில் தரையிரங்கியுள்ளார். இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில்
நேர்மறை முடிவு வந்துள்ளது.
இதையடுத்து, தற்போது இவர் சுயதனிமைப்படுத்திக் கொண்டதாக பிரபல
ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதை சுகாதார அமைச்சகம் உறுதி
செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments