மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தலா 500 ரூபாய் நிதி அதிரடி உத்தரவு

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தலா 500 ரூபாய் நிதி அதிரடி உத்தரவு
 வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 வரும் 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்பு வரும் 19ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

 மேலும், விடுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் பள்ளிக்கல்வி துறையின் அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இன்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 1173 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பள்ளிகல்வித்துறை விடுவித்துள்ளது.

  31 ஆயிரத்து 297 அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் 1.56 கோடி ரூபாயை பள்ளிகல்வித்துறை விடுவித்துள்ளது. நிதியைப் பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

Post a Comment

0 Comments