பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி
சேலம்: சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் 10-ம் வகுப்பு
மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்ற மாணவருக்கு
காயச்சல் வந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் தொற்று
உறுதியானதையடுத்து மாணவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பள்ளிகள் நேற்று
முன்தினம் திறக்கப்பட்ட நிலையில் வகுப்பறைக்கு மாணவன் சென்றுள்ளார். மாணவருக்கு
நேற்று காய்ச்சல் அறிகுறி இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மற்ற மாணவர்களுக்கும் பரிசேதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர். இன்று காலை வெளியான பரிசோதனை முடிவில் மாணவருக்கு கொரோனா இருப்பது
உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர் படித்த பள்ளியை மூட உத்தரவிட்டு மாவட்ட
சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆணையிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு
பிறகு பள்ளி மீண்டும் திங்களன்று திறக்கப்படும் என சேலம் ஆட்சியர் ராமன்
கூறினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் அரசு
மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்த 3 நாட்களிலேயே மாணவிக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக மாணவிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட் கருத்து:
பள்ளிகள் திறப்பு பற்றி அரசு சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என
சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த அழுத்தமும் இன்றி பள்ளிகள்
திறப்பு பற்றி அரசு சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. பள்ளிகள்
திறப்பு குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து 8 அல்லது 10 வாரத்தில் அரசு
முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என கூறியுள்ளது. 10, 12-ம் வகுப்பு
தொடங்கிய நிலையில் முன்கூட்டியே வழக்கு தொடரப்பட்டதாக கூறி முடித்து
வைக்கப்பட்டது.
0 Comments