6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்
இதுவரையில்,கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது,அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு, பட்ஜெட் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு: ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும்.மேலும், 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 520.13 கோடி ரூபாய் செலவில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி உயர் கல்வி பயில, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டண சலுகை, ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக, 2020- - 21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், 391.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.வரும், 2021- - 22ம் கல்வியாண்டு இடைக்கால பட்ஜெட்டில், உயர் கல்விக்காக, 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments