வரும் 9ம் தேதி துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு மருத்துவகல்வி இயக்ககம் அறிவிப்பு

வரும் 9ம் தேதி துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு மருத்துவகல்வி இயக்ககம் அறிவிப்பு

   பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 9ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என தமிழக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில், பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உட்பட 17 துணை மருத்துவப்படிப்புகள் உள்ளன. 

 இதில் அரசு கல்லூரியில் உள்ள ஆயிரத்து 590 இடங்களுக்கும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 858 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான, 2020-21ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த அக்டோபரில் நடந்தது.

  மொத்தம், 38 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 37 ஆயிரத்து 334 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tnmedicalselection.net என்ற மருத்துவ மாணவர் சேர்க்கை குழு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. 

 துணை மருத்துவப்படிப்பு கவுன்சலிங், வரும் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆன்லைனில் தொடங்குகிறது. வரும் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments