மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கேரளாவில்

கேரளாவில் 190 மாணவர்கள் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று

கேரளாவில் 2 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கேரளாவில் கடந்த மாதம் (ஜனவரி) முதல் பள்ளிக்கூடங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மலப்புரம் மாவட்டத்தின் மாரன்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் உள்ள 600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 150 மாணவர்களுக்கும், 34 ஆசிரியர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல் பொன்னனி பகுதியில் உள்ள வன்னாரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 39 மாணவர்களுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த 2 பள்ளிக்கூடங்களும் காலவரையின்றி மூடப்பட்டன. 

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது சக மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 262 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் 2 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கொரோனா

Post a Comment

0 Comments