மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி தமிழகத்தில் பள்ளி மூடல்

மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - தமிழகத்தில் பள்ளி மூடல்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்:
கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முதல் கட்டமாக தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

பாதிப்புகள்:
முதல் கட்டத்தில் பள்ளிகளில் இருந்து நோய் பரவல் இல்லை என்பதை உறுதி செய்த கல்வித்துறை தமிழகத்தில் அடுத்ததாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது.

இதனால் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புக்ளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கினாலும், பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகளை கல்வித்துறையும், தமிழக அரசும் வழங்கியுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு தொற்று:
திண்டுக்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து பள்ளியை மூடி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மாணவிகள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளதால் பெற்றோர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

Post a Comment

0 Comments