நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி,“ அனைத்து மாநில தேர்தல்களிலும், வாக்குப்பதிவுக்கான நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீடு, வீடாக வாக்கு சேகரிக்க 5 பேர் மட்டுமே செல்லவேண்டும்” என்று தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி.
80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்கலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு
தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
0 Comments