Breaking News ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை சென்னை தனியார் பள்ளி மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை

ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை சென்னை தனியார் பள்ளி மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
சென்னை: ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை என்று சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன் ஓருவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இங்குள்ள டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவன் பிரவீன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பள்ளிகள் திறந்து இரண்டொரு நாட்கள் பள்ளிக்கு சென்ற மாணவன், வீட்டில் தூக்கில் தொங்கியது கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

B, Com படிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சத்தால், இந்த துயர முடிவை எடுத்ததாக மாணவர் பிரவின் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறது. அதிலும் தனியார் கல்வி நிறுவனங்கள், நேரடி வகுப்புகளைப்போல, ஆன்லைன் கல்வியிலும் கடுமை காட்டி வருகின்றன. இருந்தாலும் ஆன்லைன் பாடங்களில் சந்தேகங்கள் கேட்க முடியாத நிலை உள்பட பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால், ஏராளமான மாணாக்கர்கள், ஆன்லைன் கல்வியை விரும்பநிலையே தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை என சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன் பிரவீன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

மாணவன் பிரவீன் கொளத்தூரில் உள்ள டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது 11ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பில் ஆசிரியர்களின் கேள்விக்கு சரியான முறையில் பதில் தெரிவிக்க முடியாமல் இருந்தாகவும், ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாததே அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் பிரவீன், ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடங்கள் புரியவில்லை என கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பிரவீன் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments