10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள்
முடிவு
அரசின் அறிவிப்பை மீறி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார்
மெட்ரிக் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என
முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
இதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை
தேர்வுத்துறை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு செல்வதற்கும், 11-ம்
வகுப்பில் பிரிவுகளைத் தேர்வு செய்ய ஏதுவாகவும், கற்றல் குறைபாட்டைப் போக்கவும்
மாணவர்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் தேர்வு நடத்த மெட்ரிக் பள்ளிகள்
முடிவு செய்துள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்
செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் இணைந்து ஒரே மாதிரியான
வினாத்தாளைக் கொண்டு பொதுத்தேர்வு நடத்தவும் முடிவு செய்துள்ளன.
0 Comments