வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்களின் கடமைகள் என்னென்ன ?

     வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்களின் கடமைகள் என்னென்ன ?

வாக்குப் பதிவு அலுவலர் 1 :

     இடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும் . வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார்.

 வாக்குப் பதிவு அலுவலர் 2 :

     வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை இட்டு வாக்காளர் பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண் , வரிசை எண் , ஆகியவற்றை எழுதி , வாக்காளர் காட்டும் புகைப்பட அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணத்தின் பெயரை பதிவேட்டின் 4 வது காலத்தில் , அதாவது குறிப்புகள் காலத்தில் அந்த ஆவணத்தின் எண்களை எழுத வேண்டும். அதன்பிறகு , வாக்காளரின் கையொப்பம் / பெருவிரல் ரேகைப் பதிவினை பெற்றுக் கொண்டு , வாக்காளர் துண்டுச் சீட்டினைவழங்க வேண்டும்.

    வாக்காளர் பதிவேட்டினை நிரப்பி , வாக்காளர் துண்டுச் சீட்டினை அளிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் வாக்காளர் வரிசை மெதுவாக நகரும் வாய்ப்பு உண்டு. அதனால் அனைத்து வாக்குப் பதிவுக் குழுவினரிடமும் அச்சிடப்பட்ட வெற்று வாக்காளர் துண்டுச் சீட்டுகள் இருப்பது அவசியமாகும் . 

    ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1200 -க்கு மேல் இருக்குமானால் , கூடுதல் வாக்குப் பதிவு அலுவலர் 2 நியமிக்கப்பட வேண்டும். ( இவர் வாக்குப் பதிவு அலுவலர் 2B என்று அழைக்கப்படுவார் ) ( 25/10/2007 நாளிட்ட இந்தியத் தேர்தல் ஆணையக் கடிதம் ) 731 

வாக்குப் பதிவு அலுவலர் 3 

     கட்டுப்பாட்டு கருவிக்கு பொறுப்பாவார். அவர் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் துண்டுச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் இடப்பட்டுள்ள அழியா மையை சரிபார்க்க வேண்டும் . முக்கியமாக கட்டுப்பாட்டு கருவியிலுள்ள வாக்குப் பதிவு பட்டனை அழுத்தி வாக்குப் பதிவு அடைப்புப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவுக் கருவியை வாக்களிக்க தயார் நிலையில் வைத்து , வாக்குப் பதிவு அடைப்புப் பகுதிக்குள் செல்ல வாக்காளர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

Click here to Download




Post a Comment

0 Comments