மன அழுத்தத்தில் ஆசிரியர்கள் - சனிக்கிழமை விடுமுறை
அளிக்கப்படுமா?
ஆசிரியர் - மாணவர் நலன் கருதியும், பொதுத் தேர்தல் பணி தொடங்க உள்ள தாலும்
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநில
பொதுச் செயலாளர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கை : இவ்வாண்டு பள்ளி தொடங்கிய நாள்
முதல் வாரத்திற்கு ஆறு (சனிக்கிழமை உட்பட) நாட்கள் பள்ளி நடைபெறுகிறது.
இந்நிலையில் மாணவர்கள் வருகை என்பது சனிக்கிழமைகளில் பெருமளவில் குறைந்து
காணப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஆசிரியர்களும், உடல் சோர்வுடன் தான்
மாணவர்கள் நலன் கருதி ஆறு நாட்களும் பணியாற்றி வருகின்றனர். ஒரு வகுப்பிற்கு 25
மாணவர்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்ற நிலையில், ஆசிரியர்கள் அனைவரும் ஒரு
நாளில் ஒரு வகுப்பு கூட ஓய்வின்றி தொடர்ந்து வகுப்புக்குச் செல்ல
வேண்டியுள்ளது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வந்து விட்டது. அனைத்து
ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணி காத்திருக்கிறது. வரும் வாரத்திலேயே
ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. அவ்வாறு வரும் போது
ஆசிரியர்கள் ஆறு நாள் அல்ல, ஏழு நாட்களும் (சனி, ஞாயிறு உட்பட) பணியாற்ற
வேண்டிய சூழல் உள்ளது.
இதை மனதில் கொண்டு, தமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையை
உடனடியாக அறிவிக்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என
உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வித்துறைக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட link- ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site
Note: The Study materials from our site are not created by us. These
materials are for only Educational and Competitive Exam Purpose. All
the credits go for the creators who created the study materials for
the Teachers of Tamilnadu.
0 Comments