அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி

    அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி மற்ற வாக்குறுதிகள் என்னென்ன? முழு விவரம்
திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி Click here
  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

  முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செய்தார். அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானவற்றை அறிவிக்கிறோம்” என்றார்


திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும்.
  • அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்
  • பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் ஆக உயர்வு
  • பள்ளி மாணவர்களுக்கு இலவச TAB வழங்கப்படும்
  • உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும்
  • ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு திட்டம்
  • சிறு குறு வணிகர்களுக்கு 15,000 ரூபாய் வரை வட்டி இல்லா கடன்
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை இலவசமாக பால் வழங்கப்படும்
  • பெட்ரோல் டீசல் ரூ.5/- விலை குறைப்பு!
  • சமையல் எரிவாயுவிற்கு ரூ.100/- மானியம்
  • ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3/- குறைப்பு
  • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  • அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும்.
  • நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்.
  • ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
  • பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
  • ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.
  • ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்.
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
  • மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு.
  • வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரில் உணவகம் திறக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டி வழங்கப்படும்.
  • பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் தீர்வு காணப்படும்.
  • இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படும்.
  • பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
  • தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
மேலும் அம்சங்கள் விரைவில்…

Post a Comment

0 Comments