வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் எந்தெந்த பட்டியல்கள் நிரப்ப வேண்டும்? எப்படி நிரப்ப வேண்டும் ?
Click here to Download
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் :
வாக்குப் பதிவு கருவிகளின் எண்ணிக்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது . உதாரணமாக 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 15 வேட்பாளர்கள் + ஒரு Nota ) , 31 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 31 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 47 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மூன்று வாக்குப் பதிவு இயந்திரமும் ( 47 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 63 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் நான்கு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 63 வேட்பாளர்கள் - ஒரு Nata ) பயன்படுத்தப்படும்.
பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இயந்திரந்தின் வலது புறத்தின் மேல்புறத்தில் உள்ள Scrolling Switch ல் எண்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியல் நகல் ( Marked Copy / Reference Copy ) களில் அனைத்து பக்கங்களும் தொடர் எண் 1 முதல் வரிசையாக எண்ணிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
குறிப்பாக வாக்குச் சாவடி வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் நகல்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக உள்ளனவா என்பதையும் அவை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உரியதுதானா என்பதையும் துணைப்பட்டியல்களுடன் கூடியதுதானா என்பதனையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டோர் குறித்த குறிப்புகள் ( PB , EDC , SV , AVSC AVPWD . AVCO ) தவிர வேறு குறிப்புகள் ஏதும் இல்லை என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் மையினால் கையொப்பமிட்ட சான்றிதழ் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் மேல் ( Marked Copy ) இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகளில் ( Tendered Ballot Papers ) உள்ள தொடர் எண்கள் சரி பார்க்கப்பட வேண்டும் . . போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்களின் மாதிரி கையொப்ப நகல் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும் . இது வாக்குச் சாவடி முகவர்களின் நியமன கடிதத்தில் உள்ள வேட்பாளரின் கையொப்பத்தினை சரிபார்த்துக்கொள்ள உதவும்.
வாக்குப் பதிவு முடியும் வரை , வாக்குப் பதிவின் போது குறிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் நகலினை வாக்குச் சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல வாக்குச் சாவடி 19 முகவர்களுக்கு அனுமதிக்கக் கூடாது . வாக்குச் சாவடிக்கு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலின் நகலினை , ( Relief ) மாற்று முகவரிடமோ அல்லது வாக்குச் சாவடி தலைமை அலவலரிடமோ கொடுக்க வேண்டும்.
பச்சைத்தாள் முத்திரையை ஒட்டுவதற்கு முன் , தான் முத்திரையின் வெண்மைப் பகுதியில் வரிசை எண்ணை அடுத்து , கீழே வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அவருடைய முழு கையெழுத்தை இட வேண்டும் . அதில் , கையொப்பமிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது வாக்குச் சாவடி முகவர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
பச்சைத்தாள் முத்திரையின் ( Green Paper Seal ) வரிசை எண்ணை வாக்குச் சாவடி தலைமை அலுவலரும் குறித்துக்கொண்டு முகவர்களையும் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் .
வாக்குச்சாவடியிலுள்ள மற்றும் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன் , கார்டுலெஸ் போன் , வயர்லெஸ் செட் ( வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தவிர ) பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .
0 Comments