இன்று ஏப்ரல் 1 முட்டாள்தினம் இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது
பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய
தேதிகளைப் புத்தாண்டாகக் கொண்டாடினர். அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களைக்
குறிப்பிட 'ஜூலியன்' எனும் பழங்கால காலண்டரைப் பயன்படுத்தி வந்தனர். அதிலும்
புத்தாண்டு தினம் ஏப்ரல் முதலாம் தேதியாகவே இருந்தது.
1582ஆம் ஆண்டு பரிசுத்த தந்தையாக இருந்த 13ஆம் கிரிகோரி, 'ஜோர்ஜி' என்ற புதிய
காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி முதலாந்தேதி பிறப்பதாகக்
குறிப்பிடப்பட்டிருந்தது. இனி, மக்கள் இந்தக் காலண்டரைத் தான் பின்பற்ற வேண்டும்
என்று பரிசுத்த தந்தை கோரிக்கை விடுத்தார். இதைப் பிரான்ஸ் நாடு உடனே
ஏற்றுக்கொண்டது.
பிரான்ஸ் மன்னர் அந்நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக்
கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி முதலாந்தேதியைப் புத்தாண்டு தினமாகக்
கொண்டாடினர். வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன.
இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரைப் பின்பற்றவில்லை. சில பகுதி
மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்ட தகவலே சென்றடையவில்லை. எனவே அவர்கள் முன்பு போல
ஏப்ரல் முதலாந் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடினர். விவரம் தெரியாமல் இவர்கள்
இன்னமும் ஏப்ரல் முதல் திகதியைப் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள், என்று புதிய
காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள்.
எனவே எப்ரல் முதலாம் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியவர்களை அவர்கள்
முட்டாள்களாகக் கருதினார்கள். கேலி செய்து ஏளனமாகப் பேசினர்.இதுவே காலப்போக்கில்
ஏப்ரல் முதல் தேதி என்றாலே அது முட்டாள்கள் தினம் என்றானது.. அன்றைய தினத்தை
அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும் மாற்றி கொண்டனர்..
ஏப்ரல் முதலாம் தேதியும் முட்டாள் தினம் என்று முத்திரை குத்தப்பட்டு
வருடந்தோறும் நினைவுகூரப்படுகின்றது.
0 Comments