ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை: 
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் ஏப்ரல் 12ம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல்வேறு வழிமுறைகளுக்கு உட்பட்டு ஜூன் மாதம் முதல் பகுதி அளவில் திறக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன.

அது தொடங்கி கோவில் குடமுழுக்கு, சிறப்பு வழிபாடுகள் உட்பட பிரசித்தி பெற்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில், சபரிமலை உள்ளிட்ட தலங்களில் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள் விழாக்களை பொறுத்து உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தைப்பூச திருநாளிற்கு தமிழகம் முழுவதும் வருடந்தோறும் பொது விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, வரும் ஏப்ரல் 12ம் தேதி நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் (ஒருநாள் மட்டும்) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

Post a Comment

0 Comments