அரியர் மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு மேலும் 3 வாய்ப்புகள்

அரியர் மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு மேலும் 3 வாய்ப்புகள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Click here to Download
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகியவற்றில் 1990-ம் ஆண்டு முதல் படித்த மாணவர்கள் அரியர் வைத்திருந்தால், அவர்களுக்கு மேலும் 3 இறுதி வாய்ப்புகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பிற என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் நேரடியாகவும், தொலைதூரக் கல்வி மூலமாகவும் படித்த மாணவர்கள் அரியர் வைத்திருப்பின், அவர்களுக்கும் 3 இறுதி வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த வகையில் அவர்கள் ஆகஸ்டு, செப்டம்பர் 2021, 2022 பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தேர்வு எழுத முடியும்.

அரியர் பாடங்களில் தேர்ச்சியடைய முடியாத மாணவர்கள் எழுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் 3 சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் அரியர் பாடங்களில் தேர்ச்சி அடைந்து கொள்ளலாம் #என்றும், முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்று அரசு அறிவித்த சமயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று சொல்லி, ஏற்கனவே இளநிலை மாணவர்களுக்கு தேர்வை நடத்தி முடித்து இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது முதுநிலை படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, அவர்களுக்கு வருகிற 26-ந்தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளது

Post a Comment

0 Comments