எடை வேகமா குறையணுமா? அப்போ இந்த 6 உணவையும் சாப்பிடுங்க
எடை இழப்பு என்பது எல்லோரின் கனவாக இருக்கின்ற காரியம் ஆகும். நிறைய பேர் எவ்வளவு
உடற்பயிற்சி செய்தும் எடை இழப்பு என்பது அவர்களுக்கு சாத்தியமான ஒன்றாக
இருப்பதில்லை. ஆனால் சில வகை உணவுகள் உங்க எடை இழப்பிற்கு உதவி செய்கிறது. இந்த
உணவுகளில் எடை இழப்பை உண்டாக்கும் விட்டமின் சி, கலோரிகள், நார்ச்சத்துக்கள்
போன்றவை காணப்படுகின்றன. குறிப்பாக சில வகை மஞ்சள் உணவுகள் எடை இழப்பிற்கு
உதவுகின்றன. எந்த மாதிரியான உணவுகள் எடை இழப்பிற்கு உதவுகின்றன என்பதை
கீழ்க்கண்டவாறு அறியலாம்.
மஞ்சள் நிற மிளகாய்
மிளகாய் பழுப்பதைப் பொருத்து வெவ்வேறு வண்ணங்களில் வருகின்றன. குறிப்பாக மஞ்சள்
நிற மிளகாய் சற்று இனிமையானது, இதில் கலோரிகள் மிகக் குறைவாக காணப்படுகிறது.
மேலும் இது உடம்பிற்கு சூட்டை அளிக்கிறது. எனவே உடம்பிற்கு வெப்பத்தை அளிப்பதன்
மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும். எனவே உங்க மெட்டா பாலிசம்
அதிகரிக்கும் போது தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பித்து
விடும். சாலட், சாண்ட்விட்ச் போன்றவற்றில் மஞ்சள் நிற மிளகாய் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சள் ஒரு மூலிகை பொருளாகும். இதுவும் எடை இழப்பில் மிக முக்கியமான பங்கு
வகிக்கிறது. இதிலுள்ள குர்குமின் என்ற பொருள் உடலில் கொழுப்பு படிவதை
குறைக்கிறது. எனவே உங்க உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க
மஞ்சள் உதவுகிறது. எனவே நீங்கள் சமைக்கும் கறிகளில் மஞ்சள் தூள் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
லெமன்
லெமனில் விட்டமின் சி உள்ளது. இதுவும் உடல் எடையை குறைக்க உதவும். இதில் பெக்டின்
எனப்படும் பொருள் உள்ளன. மேலும் லெமனில் காணப்படும் நார்ச்சத்துக்களும் உடல் எடை
இழப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே உடங் எடையை குறைக்க
விரும்புபவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் லெமன் சாற்றை பிழிந்து குடித்து வாருங்கள்,
சுவைக்கு வேண்டுமென்றால் தேன் சேர்த்து கொள்ளுங்கள். நன்மை கிடைக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழமும் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு தேவையான
ஆற்றஙை உடனடியாக வழங்கக் கூடியது. எனவே எடையை குறைக்க நீங்கள் விரும்பினால்
வாழைப்பழத்தை பிசைந்து வறுத்த சீரகம் சேர்த்து ஒவ்வொரு நாளும் 2 ஸ்பூன் வீதம்
சாப்பிட்டு வாருங்கள்.
துவரம் பருப்பு
துவரம் பருப்பு பெரும்பாலான இந்திய வீடுகளில் காணப்படுகிறது. இது மிகக் குறைந்த
கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே எடையை இழக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி.
இந்த துவரம் பருப்பில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் போன்றவை
காணப்படுகிறது. எனவே இதை நீங்கள் உங்க உணவில் சேர்த்து வரும் போது எடை இழப்பை பெற
முடியும்
தேன்
நீங்கள் சர்க்கரையை பயன்படுத்தி வந்தால் அதற்கு மாற்றாக தேனை பயன்படுத்தி வரலாம்.
சர்க்கரையை விட தேன் குறைந்த கலோரிகளை கொண்டது. எனவே தேநீரில் தேன் சேர்த்து
கொள்ளுங்கள். தேன் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது செரிமான முறையை
அதிகப்படுத்துகிறது. ஒரு ஸ்பூன் இஞ்சி சாற்றை எடுத்து அதில் தேன் கலந்து
கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு முறை என நீங்கள் செய்து வரும் போது எடை இழப்பை
பெறலாம். .
0 Comments