கொரோனா தடுப்பு பணிக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

கொரோனா தடுப்பு பணிக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
Click here to Download
கொரோனா தடுப்பு பணிகளுக்கு செல்லாத ஆசியர்கள் 3 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் விவகாரம் சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆசிரியர்களை களப்பணிக்கு அனுப்பாமல், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி சில முக்கியமான பணிகளை மட்டும் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் களப்பணிக்கு சென்று கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிய வேண்டும் என்றும் 500 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகள் யாருக்கெல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் அந்த பணிகளுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

அவ்வாறு கொரோனா தடுப்பு பணிகளுக்கு செல்லாத ஆசியர்கள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் 3 நாட்களுக்குள்ளாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்காதவர்கள் மீது பேரிடர் மேலாணமை சட்டத்தின் 2005 பிரிவு 56-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்கள், சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்சினைகள் கொண்டவர்களுக்கு மட்டுமாவது இதில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ஆசியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments