அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் முதல் அலை கொரோனா பாதிப்பின்போது, தடுப்பூசி இன்றி உயிர்பலி ஏற்பட்டு வந்தது. தற்போது 2வது அலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அதனால் நோய் குறைந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களில் தடுப்பூசி போடாதவர்கள், அருகே உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை பள்ளிக்கல்வித்துறை மூலம் இணையதளத்தில் உள்ள கோவிட்-19 ஷீட்டில் அப்டேட் செய்ய வேண்டும். அதில் முதல் தவணை தடுப்பூசியா? 2வது தவணை தடுப்பூசியா? எத்தனை தடுப்பூசி என்று பதிவிட வேண்டும்.

இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments