December Month Important Days Current Affairs
டிசம்பர் Important Days | ||
டிசம்பர் 1 | உலக எய்ட்ஸ் தினம் | ③ மையக்கருத்து - ‘Ending the HIV/AIDS epidemic: Resilience and Impact’. |
தேசிய மாசு தடுப்பு தினம் | ③ 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மெத்தில் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு கசிவு ஏற்பட்டது. ③ இந்த விபத்து உலகளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதையடுத்து இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2-ம் தேதி தேசிய மாசு தடுப்பு தினம் (National Pollution Prevention Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. | |
டிசம்பர் 4 | இந்திய கப்பற்படை தினம் | ③ மையக்கருத்து - “Indian Navy Combat Ready, Credible & Cohesive”. |
டிசம்பர் 4 | சர்வதேச வங்கி தினம் | |
டிசம்பர் 5 | உலக மண் தினம் | ③ மையக்கருத்து - ‘Keep soil alive, Protect soil biodiversity’! |
டிசம்பர் 5 | சர்வதேச தொண்டர்கள் தினம் | ③ மையக்கருத்து - “Together We Can Through Volunteering”. |
டிசம்பர் 7 | ஆயுதப்படைகளின் கொடி நாள் | ③ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி ஆயுதப்படைகளின் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதல் முறையாக 1949ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. |
டிசம்பர் 7 | சர்வதேச விமானப்படை தினம் | ③ மையக்கருத்து 2019-2023 -“Advancing Innovation for Global Aviation Development”. |
டிசம்பர் 9 | சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் | ③ மையக்கருத்து - ‘RECOVER with INTEGRITY.’ |
டிசம்பர் 10 | உலக மனித உரிமை தினம் | ③ மையக்கருத்து - “Recover Better – Stand Up For Human Rights”. |
டிசம்பர் 11 | சர்வதேச மலை தினம் | ③ மையக்கருத்து - Mountain biodiversity. |
டிசம்பர் 11 | யுனிசெஃப் தினம் | ③ ஒவ்வொரு ஆண்டும் யுனிசெஃப் தினம் டிசம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. ③ இரண்டாம் உலகப் போரினால் பேரழிவிற்குள்ளான குழந்தைகளின் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பொது நலனை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1946 டிசம்பர் 11 அன்று யுனிசெப்பை உருவாக்கியது. ③ யுனிசெப்பின் பெயர் பின்னர் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதியில் இருந்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் நிதியமாக மாற்றப்பட்டது. |
டிசம்பர் 14 | தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் | |
டிம்பர் 16 | 1971 பேர் வெற்றி தினம் (விஜய் திவாஸ்) | ③ கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16ம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 49 வது விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்பட்டது. |
டிசம்பர் 18 | கோவா விடுதலை பெற்ற 60- வது ஆண்டு தினம் | ③ கோவா விடுதலை பெற்று 60-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. ③ 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து டிசம்பர் 19, 1961 அன்று விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கோவா விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது. ③ டிசம்பர் 18, 1961 – 36 மணி நேர, “ஆபரேஷன் வெற்றி“ என்று பொருள்படும் “ஆபரேஷன் விஜய்“ இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டது. |
டிம்பர் 18 | சர்வதேச இடப்பெயர்வு தினம் | ③ மையக்கருத்து - ‘Reimagining Human Mobility’. |
டிசம்பர் 18 | சிறுபான்மையினர் உரிமை தினம் | ③ 1992 டிசம்பர் 18 அன்று ஐ.நா. சிறுபான்மையினரை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சிறுபான்மையினர் மக்களின் உரிமைகள் மீதான பிரகடனத்தை வெளியிட்டது. |
டிசம்பர் 22 | தேசிய கணித தினம் | ③ உலகின் மிகச் சிறந்த கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 22ம் தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ③ கணித மேதை ராமானுஜனின் 133-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. |
டிசம்பர் 24 | தேசிய நுகர்வோர் தினம் | ③ 2020ஆம் ஆண்டின் மையக்கருத்து “Sustainable Consumer” என்பதாகும். ③ இந்த நாளில் 1986 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. ③ நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான பொருட்களையும் பல்வேறு வகையான முறைக்கேடுகளில் இருந்து நுகர்வோர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். |
டிசம்பர் 25 | தேசிய விவசாயிகள் தினம் | ③ ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளை டிசம்பர் 23- ந் தேதி “தேசிய விவசாயிகள் தினமாக“ கொண்டாடப்பட்டு வருகிறது. தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து அவரது பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. |
டிசம்பர் 25 | சிறந்த நிர்வாக தினம் | ③ வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி அவரை கவுரவிக்கும் வகையில் சிறந்த நிர்வாக தினம் கொண்டாடப்படுகிறது. ③ கடந்த 1996, 1998-99 மற்றும் 1999-2004 என 3 முறை பிரதமர் பதவி வகித்தார். |
0 Comments