1959ம் ஆண்டில் கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த கலைஞர் கருணாநிதி வேங்காம்பட்டி அரசு பள்ளிக்கு ஆய்வு பணிக்காக சென்றிருந்தார். ஆய்வு முடிந்த பின்னர் அவர் அப்போதைய அரசுக்கு எழுதிய ஆய்வு அறிக்கையை தற்போதைய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நெகிழ்ச்சியுடன் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த அறிக்கையில் கருணாநிதி எழுதியிருந்தாவது, '' இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 102இல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் பகுதி உளுத்து போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றி வருவதாக பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று''.
அன்புள்ள
மு. கருணாநிதி
தேதி: 26.6.1959
என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments