தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குரூ.5,000 நிவாரணம் வழங்க கோரிக்கை
கரோனா ஊரடங்கு காரணமாக ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக
அரசு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 22,000 தனியார் பள்ளிகள் செயல்படுகின் றன. இவற்றில் ஆசியர்கள்
3 லட்சம் பேரும், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் 2 லட்சம் பேரும்
பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கரோனா பரவல் அச்சம் காரணமாக விதிக்கப்பட்ட
ஊரடங்கால் கடந்த 14 மாதங்களாக பள்ளிகள் செயல்பட வில்லை. இதனால், இவர்க ளுக்கு
முறையான ஊதியம் வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தனியார் பள்ளி ஆசிரி
யர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் கரோனா நிவாரண உதவி
வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி தாளாளர் ரமேஷ் கூறியது: எங்கள் பள்ளியில் பயிலும்
மாணவர்களில் 50 சதவீதத்தினரே ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்களிலும்
பலர் கட்டணம் செலுத்துவதில்லை.
இந்நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற் காகவும், வாகனங்களுக்காகவும்
வாங்கிய வங்கிக் கடன் தவணை களை செலுத்த வேண்டியுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு
மாத ஊதியமும் வழங்குவது பெரும் சுமையாக உள்ளது.
இதனால், பாதிக்கப்படுவது தனியார் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்களும், இதர ஊழி
யர்களும்தான். எங்களால் இயன்ற வரை உதவி வருகிறோம். அரசும் இவர்களுக்கு தலா ரூ.5
ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
தனியார் பள்ளி ஆசிரியர் அனிதா கூறியதாவது: ஆன் லைன் வகுப்பு எடுக்கும் ஆசிரி
யர்களுக்கு மட்டும் 50 சதவீத ஊதியம் வழங்கப்படுகிறது. மற்ற ஆசிரியர்களுக்கு இந்த
ஊதியமும் கிடைப்பதில்லை. பல பள்ளிகளில் இந்த குறைந்தபட்ச ஊதியமும்
வழங்கப்படவில்லை.
இதனால், வீட்டு வாடகைக் கூட கொடுக்க முடியாமலும், அன்றாட செலவுகளுக்கும் தனியார்
பள்ளி ஆசிரியர்கள் பலர் சிரமப்படுகிறோம். குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு,
எவ்வித பணி பாதுகாப்புமின்றி வேலை செய்துவருகிறோம். இந்த பேரிடர்
காலக்கட்டத்திலாவது எங்களுக்கு உதவும் வகையில் மற்ற தொழி லாளர்களுக்கு
வழங்குவதைப் போல தலா ரூ.5 ஆயிரம் நிவா ரண உதவி வழங்குவதுடன், மாத ஊதியம்
முறையாகக் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
1 Comments
Yes do sir
ReplyDeleteBecause all pvt school teachers were suffered a lot
Pls help us