வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியீடு

 வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியீடு

    பள்ளிகள் மூடியிருக்கும் காலகட்டம் மற்றும் அதையும் கடந்து வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை வெளியிட்டுள்ளது.

    இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, பெற்றோரின் படிப்பறிவு எந்தளவில் இருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கற்றலில் அவர்களது பங்களிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பெருந்தொற்றின் இந்த புதிய காலகட்டத்தில், பள்ளிகள் மூடியிருக்கும் சமயத்தில், ‘ஏன்’, ‘என்ன’ மற்றும் ‘எவ்வாறு’ குறித்த தகவல்களை வழங்குவதை இந்த வழிகாட்டுதல்கள் நோக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இல்லமே முதல் பள்ளி, பெற்றோரே முதல் ஆசிரியர்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

      பாதுகாப்பான, ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குதல், குழந்தைகள் மீது நியாயமான எதிர்பார்ப்புகளை வைத்தல், ஆரோக்கியத்தை பராமரித்து சத்துள்ள உணவுகளை உண்ணுதல், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருத்தல் ஆகியவற்றின் மீது வீட்டுமுறை கற்றல் வழிகாட்டுதல்கள் கவனம் செலுத்துகின்றன.

        இவை பெற்றோருக்கானவை மட்டுமே அல்லாமல், பராமரிப்பாளர்கள், இதர குடும்ப உறுப்பினர்கள், தாத்தா பாட்டிகள், சமூக உறுப்பினர்கள், சகோதர சகோதரிகளுக்கும் உரித்தானவை ஆகும். வீட்டுப்பாடம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், முடிவுகள் மற்றும் திட்டமிடுதல் உள்ளிட்டவற்றில் பெற்றோரை ஈடுபடுத்துமாறு பள்ளிகளை இந்த வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன.

       குறைந்த எழுத்தறிவுள்ள அல்லது கல்வியறிவு இல்லாத பெற்றோருக்காக தனி அத்தியாயம் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெற்றோருக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எடுக்கலாம்.

Click here to Download Guidelines



Post a Comment

0 Comments