பள்ளி கல்லூரிகள் ஆகஸ்டு 20ம் தேதிக்கு பின்னர் திறக்க வாய்ப்பு

 பள்ளி கல்லூரிகள் ஆகஸ்டு 20ம் தேதிக்கு பின்னர் திறக்க வாய்ப்பு
 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பரவலின் இரண்டாவது அலை சற்று தணிந்துள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

   இந்நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த பள்ளி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலனை நடைபெறுகிறது" என்று கூறியிருந்தார்.

  இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ஆகஸ்ட் 15ம் தேதி முதல்வரின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments