செப்டம்பர் 1 ந் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 சுழற்சி
முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 1 முதல் 8 ம்
வகுப்பு மாணவர்களுக்கு 15 ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்று அறிவிக்கப்படும்.
1-9-2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 -
ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ,
செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப்
பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன்
அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 -
க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன
அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த
அனுமதிக்கப்படும் . இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின்
செயலாளர்கள் வழங்குவார்கள் . கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் .
அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses ,
Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் . ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க
வேண்டும்.
0 Comments