மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
Click here to Download


  மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளதை அடுத்து, 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜூலை 1ம் தேதி முதல் 3% அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

  தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். 

 இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் 9,488.70 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

Post a Comment

0 Comments