இனி கட்டணம் என்று ‘PhonePe’ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால்
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மளிகை கடை முதல் உணவகங்கள் வரை நாம் எங்கு சென்றாலும் ஆன்லைன்
பரிவர்த்தனைகளையே மேற்கொள்கிறோம். யுபிஐ (UPI) மூலம் செயல்படும் இதனை நாம்
போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பயன்படுத்தி வருகிறோம். பணமாக
கையில் எடுத்து செல்வதை விட ஆன்லைன் பேங்கிங் முறை எளிதாக இருக்கிறது. எந்த
இடத்திற்கு சென்றாலும் QR CODE ஸ்கேன் செய்து பணத்தினை எளிதாக செலுத்தி
வருகிறோம்.
பணம் செலுத்துவது மட்டுமில்லாமல் மொபைல், மின்சாரம் போன்ற
கட்டணங்களையும் செலுத்துகிறோம். கேஷ்பேக், வவுச்சர் போன்ற சலுகைகள் கிடைப்பதும்
இதனை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும். இந்த நிலையில் ரூ.50க்கும் மேல்
ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று போன்பே நிறுவனம்
அறிவித்துள்ளது. போன்பே நிறுவனம் ஏற்கனவே கிரெடிட் கார்டுகள் மூலம்
செலுத்தப்படும் ரீசார்ஜ் கட்டணங்களுக்கு ‘பிராசஸிங் பீஸ்’ எனப்படும் செயலாக்கக்
கட்டணத்தை வசூலிக்கிறது.
இதுபற்றி பேசிய போன்பே நிறுவனத்தினர், ‘ரூ.50க்கு குறைவான
மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான மொபைல்
ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படும். பல
நிறுவனங்கள் ஏற்கனவே ட்ஜிட்டல் தளத்தில் சிறிய அளவிலான தொகையை பிராசஸிங் கட்டணமாக
வசூலித்து வருகிறது. நாங்கள் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல்
ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம். இது பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தாது’ என்று கூறியுள்ளார்.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக
திகழும் போன்பே, கூகுள்பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளில்
மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது. போன்பே மற்றும் கூகுள்பே நிறுவனங்கள்
வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், வவுச்சர் போன்ற ஊக்கத்தொகைகளை தொடர்ந்து
வழங்குகிறது. இதனால் போன்பே நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 165
கோடிக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் ஆன்லைன் பேமெண்ட்கள் தொடர் வளர்ச்சி
கண்டுள்ளன. இந்தநிலையில் ரீசார்ஜ் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுவதால் இனி வரும்
காலங்களில் அனைத்து விதமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம்
வசூலிக்கப்படுமோ என்ற பயம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்
வாடிக்கையாளர்கள் ஒரு ஆப்பில் இருந்து மற்றொரு ஆப்பிற்கு மாற முடிவு செய்வார்கள்
என எதிர்பார்க்காடுகிறது.
0 Comments