கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
Click here to Download
  கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

 மாநிலம் முழுவதும் சமக்ர சிக்‌ஷாவில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  நவம்பர் 1-ம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசகர்களாக பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நவம்பர் 1-ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தாது என சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments