TRB Polytechnic தேர்வு December 8,9,10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் - உயர்கல்வி அமைச்சர் திரு.பொன்முடி

     தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2017-2018 ஆம்‌ ஆண்டிற்க்காண அரசு பாலிடெக்னிக் கல்லூரி 1,060 விரிவுரையாளருக்கான தேர்வு கடந்த மாதம் 28, 29, 30 மற்றும்‌ 31 தேதிகளில்‌ நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின்‌ அனுமதி சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரி http://www.trb.tn.nic.in/ ல் தேர்வர்கள்‌ பதிவிறக்கம்‌ செய்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்களை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனைவரது கோரிக்கையையும் ஏற்று அக்டோபர் 28 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 25ஆம் தேதி தெரிவித்து இருந்தார். தேர்வர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறி இருந்தார்.

     இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, டிசம்பர் 8-ம் தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும். டிசம்பர் 8ல் தொடங்கி 12ம் தேதி வரை தொகுதி வரியாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் என்றார். அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி 23,684 பேரும் 9ம் தேதி 21,299 பேரும், 10ம் தேதி 24,710 பேரும், 11ம் தேதி 32,190 பேரும், 12ம் தேதி 36,248 பேரும் தேர்வு எழுத எழுதும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.



Post a Comment

0 Comments