10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அனைவரையும் துணை தேர்வெழுத எழுதவைக்க உத்தரவு

     நடைபெற்று முடிந்த மே -2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை ( முதலாமாண்டு இரண்டாமாண்டு ) பொதுத் தேர்வில் தோல்வியுற்ற / வருகைப்புரியாத தேர்வர்களுக்கு தேர்வு முடிவுக்கு பின் ஜூலை / ஆகஸ்ட் 2022 ல் சிறப்புத் துணை பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.

       ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் தத்தம் பள்ளியில் பயின்று மே -2022 ல் பத்தாம் வகுப்பு / மேல்நிலை ( முதலாமாண்டு / இரண்டாமாண்டு ) தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் எவரையும் விடுபடாமல் ஜூலை / ஆகஸ்ட் 2022 ல் சிறப்பு துணைத் தேர்விற்கு ஆன் - லைனில் பதிவு செய்திட உரிய முன்னேற்பாடுகள் செய்திடவும் , மாணவர்களை தொடர்பு கொண்டு தேர்வுக்கு தயார் செய்திடவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    பள்ளிகள் ஏதேனும் இப்பணியினை செய்யாது புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்துக்கப்படுகிறது. எனவே , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பு துணைத் தேர்விற்கு அறிவிப்பு பெற்ற உடன் உரிய காலத்தில் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கிருஷ்ணகிரி / ஒசூர் / தேன்கனிக்கோட்டை / மத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் எவரும் விடுபடாமல் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .



Post a Comment

0 Comments