இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லுாரிகளை தேர்வு செய்ய உதவியாக,
ஐந்தாண்டுகளின், 'கட் - ஆப்' மதிப்பெண் விபரங்களை, தமிழக உயர்கல்வித் துறை
வெளியிட்டுள்ளது.
Click here to View Cutt-off Marks
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,
இன்ஜினியரிங் மாணவர்சேர்க்கைப் பணிகள் துவங்கியுள்ளன.தமிழக உயர்கல்வித் துறை
சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன்' வழியில்
விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள்,
www.tneaonline.org என்ற இணையதளத்தில், ஜூலை 19க்குள் தங்களின் விண்ணப்ப
விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பட்டப் படிப்பை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங்கில்
பங்கேற்க உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் ஆகியவை குறித்தும், இட ஒதுக்கீட்டு
விதிகள் குறித்தும், இந்த இணையதளத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில்,
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் கட் - ஆப் மதிப்பெண்ணை கணக்கிட
வேண்டும்.
இன்ஜினியரிங்கில் தங்களுக்கு எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவு
கிடைக்கும் என்ற உத்தேச நிலையை தெரிந்து கொள்ள, முந்தைய ஐந்தாண்டுகளின் கட் - ஆப்
மதிப்பெண் விபரங்களை, உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கேற்ப, தங்களின்
கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு பட்டியலை மாணவர்கள் உத்தேசமாக தயாரிக்கலாம் என,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments