Full Academic Year மாத கல்வி நாட்காட்டி - 2022

ஜூன் மாத கல்வி நாட்காட்டி - June Dairy 2022

     தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் மாத நாட்காட்டி வெளியீடு!

  தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஜூன் மாத கல்வி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மாத கல்வி நாட்காட்டி:

  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

    அதன் படி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிந்துள்ளது. 2 ஆண்டுகள் கழித்து தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுத வந்தனர். மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான ஜூன் மாத கல்வி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாத கல்வி நாட்காட்டி
   10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி 2.6.22 முதல் தொடக்கம். வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளது

BEO அலுவலக குறைதீர் நாள் - 04.06.2022

1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - 13.06.2022

1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கட்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 06.06.2022 முதல் 10.06.2022 வரை - 5 நாட்கள்.

4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 - 2 நாட்கள்

STEM TRAINING DIST LEVEL - 17.06.2022 ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு)

6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING - 24.06.2022

CRC MEETING - 18.06.2022

20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

R.L -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை


Note: The Study materials from our site are not created by us. These materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators who created the study materials for the Teachers of Tamilnadu.



Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.

Post a Comment

0 Comments