July 15 Kamarajar Speech Essay Poem Songs and Videos Collection in English Tamil

July 15 Kamarajar Speech Essay Poem Songs and Videos Collection in English Tamil

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை
Click here to Download Speech -1
Click here to Download Speech -2
Click here to Download Speech -3
Kamarajar Birthday Speech Tamil

கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை | Kamaraj Speech in Tamil
Naan virumbum thalaivar kamarajar katturai in tamil: காமராஜர் (Kamaraj) 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மயார் தம்பதியினருக்கு பிறந்தார். முதலில் அவருக்கு காமாட்சி என பெயர் சூட்டப்பட்டு பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர் என காமராஜருக்கு பல முகங்கள் உண்டு. 1960 களில் இந்திய அரசியலின் கிங்மேக்கர் என அழைக்கப்பட்ட காமராஜர், தமிழகத்தில் பெருந்தலைவர் என போற்றப்படுகிறார். இவரை பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதுவோம் வாங்க.

நான் விரும்பும் தலைவர் காமராஜர் கட்டுரை | Kamarajar Birthday Speech Tamil | Kamarajar Speech in Tamil for Students

முன்னுரை:
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவார், பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்து பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இத்தகைய கல்வியின் நாயகனான காமராஜர் பற்றிய கட்டுரையை இப்பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

இளமை பருவம்:
கர்மவீரர் காமராஜர் அவரது ஆரம்ப கல்வியை தனது ஊரில் பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். இவரது 6-வது வயதின் போது அவருடைய தந்தையை இழந்ததால் அவரது பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

அரசியல் பணி:
இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர். தனது 16-வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார்.

1930-ஆம் ஆண்டு சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம் நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிறகு அடுத்த ஆண்டே காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள் சென்னையில், “வாள் சாத்தியகிரகத்தை தொடங்கி, நீல் சிலை சத்தியாக்கிரத்திற்குத் தலைமைத் தாங்கினார்.

மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காங்கிரஸ்:
காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.

1936-ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்.

காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை

தமிழக முதல்வராக:
1953-ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.

கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

தன்னுடைய முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

கல்வி:
17000-த்திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்கிழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏறுபடுத்தினார்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறை:
தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்களை போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

நெய்வேலி நிலக்கரித் திட்டம்.

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை.

திருச்சி பாரத் ஹெவி எலக்ரிக்கல்ஸ்.

கல்பாக்கம் அணு மின்நிலையம்.

ஊட்டி கச்சா ஃபிலம் தொழிற்சாலை.

கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை.

நீர்ப்பாசனம்:
மேட்டூர் கால்வாய்திட்டம்.

பவானி திட்டம்.

காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்.

மணிமுத்தாறு, அமராவதி, வைகை சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்ப்பாசன திட்டங்களையும் ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் தலைவர்:
கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின் படி அக்டோபர் 2, 1963-ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.

1963 அக்டோபர் 9-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பேறுபெற்றார்.

1964-ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.

1966-ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48-வது வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்.

இறப்பு:
1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 தேதி தன்னுடைய 72-வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments