தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை நோன்பு இருப்பதால் அன்றும் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை நோன்பு இருப்பதாலும், வெளியூருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதில் சிரமம் இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் அக்-24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் கடைசி இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக வருகிறது. அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று செல்வார்கள்.

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடிவிட்டு 24ஆம் தேதி மாலையில் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும், மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் போதுமான அளவு இடம் கிடைக்காத சூழ்நிலை இருக்கும் எனவும், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை அன்று நோன்பு இருப்பதால் அன்று விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்டரிக் ரைமண்ட் தெரிவித்தார். அதேபோல் ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் ஆருணன் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments