பொங்கல் சிறப்பு பேருந்துகள் - எந்தெந்த ஊர்களுக்கு எங்கெங்கே பேருந்து நிலையங்கள்

  பொங்கல் சிறப்பு பேருந்துகள் - எந்தெந்த ஊர்களுக்கு எங்கெங்கே பேருந்து நிலையங்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை தமிழக‌ அரசு இயக்கவுள்ளது.
பொங்கல் திருவிழாவை மக்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த தகவலின்படி, வரும் 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்து‌கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில்‌ இருந்து இயக்கப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 

மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பொங்கல் பண்டிகையை முடித்து திரும்ப வரும் 16 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை திரும்ப 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகளும்‌, பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 9 ஆயிரத்து 370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் விழா முடித்து திரும்ப மொத்தம் 16 ஆயிரத்து 971 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகளுக்காக சென்னையி‌ல் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் உள்ள முன்பதிவு மையங்களில் வரும் 9ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மேலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவும் இணையதள முகவரிகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகளுக்கு தினங்களில் அவர்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஆண்டுதோறும் பண்டிகை தினங்களில் இயக்கிவருகிறது. இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

அது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து 4,078 பேருந்துகள், மற்ற முக்கிய நகரங்களிலிருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்வதற்காக 13 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூவிருந்தவல்லியில் ஒரு மையம் செயல்படும்.

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

பொங்கலுக்குப் பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புதிய பேருந்து நிலையம் - செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்

கே.கே.நகர் பேருந்து நிலையம் - ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலையப் பேருந்து நிலையம் - திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம் - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தசி செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம் - மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள்(மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர், பெங்களூரு)

கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Post a Comment

0 Comments