TNPSC - சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு; சென்னையில் நாளை நடக்கிறது!
சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் சென்னையில் நாளை நடக்கிறது. 12
பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வை 593 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி
வெளியிட்டது.
இத்தேர்வுக்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 327 பேர்,
பெண்கள் 266 பேர் அடங்குவர். இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13ம் தேதி(நாளை)
நடக்கிறது.
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது. முதல் தாள்
தேர்வில் கம்யூனிட்டி மெடிசின்(பட்டப்படிப்பு தரம்) தேர்வு நடைபெறுகிறது. இதில்
200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண் வழங்கப்படும். பிற்பகல் 2.30 மணி முதல்
5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. அதாவது பகுதி ‘‘அ” வில் கட்டாய தமிழ்
மொழி தகுதி தேர்வும்(10ம் வகுப்பு தரம்), பகுதி ‘‘ஆ” பொது அறிவு (பட்டப்படிப்பு
தரம்) தேர்வும் நடக்கிறது.
இதில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முக தேர்வு
மற்றும் ஆவணங்களுக்கு 60 மதிப்பெண்கள் என 510 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த
கணினி வழித்தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது. 593 பேர்
எழுதுகின்றனர்.
0 Comments