தமிழக பட்ஜெட் 2023 - முக்கிய அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட் 2023 - முக்கிய அறிவிப்புகள் ( Live Update ...)
Click here - Live Update
2023-24 நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தற்போது தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

தமிழக பட்ஜெட் 2023 - முக்கிய அறிவிப்புகள் :

Live Update :
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன - நிதி அமைச்சர்

உணவு மானிய திட்டத்திற்கு ரூபாய் 10,500 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் 10,000 குளங்கள் ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் - நிதி அமைச்சர்

பெண் தொழில் முனைவோர் புதிய தொழில்களை தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும் - நிதி அமைச்சர்

காலை உணவு திட்டத்தால் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு திட்டத்தால் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு - நிதி அமைச்சர்

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 லிருந்து 2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு கடன் உதவி வழங்கப்படும் - நிதி அமைச்சர்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - நிதி அமைச்சர்

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் கூடுதலாக 23 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது - நிதி அமைச்சர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது, 500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் - நிதி அமைச்சர்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை
சென்னையில் உலகளவில் விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - நிதி அமைச்சர்

தொழில் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத் தரமிக்க பயிற்சி வழங்கப்படும். இதற்காக 120 கோடியில் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். இத்திட்டத்தில் 12.7லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் - நிதி அமைச்சர்

தென் தமிழகத்தின் அடையாளமாக திகழப்போகும் மதுரை நூலகம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் - நிதி அமைச்சர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ரூ80 கோடி மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர்

பள்ளிக் கல்வித்துறை
அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து நடத்த கோரிக்கை வந்தன. அது மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுமே பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்

புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா

வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் நிதி ஆண்டிலும் நடத்தப்படும் - நிதி அமைச்சர்

திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மகாத்மா காந்தி மருத்துவமனையில் ரூபாய் 110 கோடி மதிப்பில் சிறப்பு கட்டடங்கள் கட்டப்படும் - நிதி அமைச்சர்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் குடும்பத்திற்கு 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 11.82லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments