கடல்சார் படிப்புகளில் சேர மாணவியர் ஆர்வம் அதிகரிப்பு

கடல்சார் படிப்புகளில் சேர மாணவியர் ஆர்வம் அதிகரிப்பு

திருச்செந்துார் அருகே கொற்கை கடலுக்கு அடியில் நடக்கும் அகழாய்வு முடிவுகள், விரைவில் வெளியிடப்படும்,'' என, சென்னை கடல்சார் பல்கலை தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஜோஷி கூறினார்.

கடல், துறைமுகம், கப்பல் போக்குவரத்து, மீட்பு பணி சார்ந்த படிப்புகளுக்காக, 2008ம் ஆண்டு, மத்திய அரசு சார்பில் கடல்சார் பல்கலை துவங்கப்பட்டது.
சென்னை, விசாகப்பட்டினம், கோல்கட்டா, மும்பை, கொச்சி ஆகிய நகரங்களில், இதன் மையங்கள் உள்ளன. கடல் அறிவியல் சார்ந்து, பி.எஸ்சி., - பி.டெக்., உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.

பல்கலை தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஜோஷி கூறியதாவது:

கடந்த ஒன்பது ஆண்டுகளில், சென்னை, விசாகப்பட்டினம், கோல்கட்டா, கொச்சி ஆகிய மையங்களில், புதிய பாடப்பிரிவுகள் துவங்கி உள்ளோம். 2017ம் ஆண்டில் இருந்து, பிஎச்.டி., மாணவர்கள் சேர்க்கை துவங்கியது; இப்போது, 55 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

படித்து முடித்த பின், கப்பலில் மூன்று, நான்கு மாதங்கள் பயணம் செய்து, பணி செய்ய வேண்டி உள்ளதால், பெண்கள் ஆர்வம் காட்டாத காலக்கட்டம் இருந்தது.

கடந்த 2014ம் கல்வியாண்டில், 13 மாணவியர் சேர்ந்தனர். விழிப்புணர்வு காரணமாக தற்போது 123 மாணவியர் படிக்கின்றனர்.

கடலுக்குள் இருக்கும் பழமையான கலாசார பதிவுகள் குறித்து அகழாய்வு செய்கிறோம். இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்த பின், முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலை நிதித் துறை அதிகாரி சரவணன் உடன் இருந்தார்.

கடந்த கல்வியாண்டில் மாநிலவாரியாக நடந்த மாணவர் சேர்க்கை விபரம்:

கேரளா 298

பீஹார் 139

உத்தர பிரதேசம் 102

மகாராஷ்ட்ரா 77

மேற்கு வங்கம் 71

தமிழகம் 63

கடந்த கல்வியாண்டில் மாநிலவாரியாக

நடந்த மாணவர் சேர்க்கை விபரம்:

கேரளா 298

பீஹார் 139

உத்தர பிரதேசம் 102

மகாராஷ்ட்ரா 77

மேற்கு வங்கம் 71

தமிழகம் 63

Post a Comment

0 Comments