6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பது ஏன்

  6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பது ஏன்?
நாட்டில் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்துவம் பணி நிறைவுபெறாத நிலையில், 2030-க்குள் 6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் இந்தியா அதிதீவிரமாக இயங்கி வருகிறது.

நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா மெத்தனமாகவே உள்ளது. ஆனாலும், வருங்காலத்தில் 6ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், இணைய வேகம் 1 டிபிபீஎஸ் (1,000 ஜிபிபீஎஸ்) ஆக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக, நாட்டில், 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது என்பது கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில்தான் தொடங்கியது. எனினும், பல நகரங்களில் 5ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான கம்பிவடமற்ற, இணையதள தொலைத்தொடர்பை மேம்படுத்துவது முன்னெடுக்கப்படவில்லை. அதனால் நாடு முழுவதும் 5ஜி பரவலாக்கப்படுவது இன்னமும் செயல்பாட்டிலேயே உள்ளது. ஆனால், அதற்குள், வரும் 2030ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் 6ஜி தொழில்நுட்பத்தை பரவலாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கிவிட்டனர், 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே 6ஜிக்கான அரசின் அறிக்கையை பாரத் 6ஜி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, ஏற்கனவே இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் சார்ந்த 127 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளது. இதுவே, அடுத்தகட்ட நகர்வுக்கான ஆதாரமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிக்கு நகர்வது ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?
5ஜி தொழில்நுட்பம் என்பது இணையதள வேகத்தை 40-1, 100 எம்பிபீஎஸ் என்ற அளவில் உறுதி செய்கிறது, மில்லிமீட்டர்-அலை ஸ்பெக்ட்ரம் மற்றும் பீம்ஃபார்மிங் (மேம்படுத்தும் ஒரு நுட்பம்) உதவியுடன் 10,000 எம்பிபீஎஸ்- ஐ அடையும் திறன் கொண்டது.

இதன் மூலம், தற்போதிருக்கும் இணைய வேகத்தைக் காட்டிலும் 6ஜி தொழில்நுட்பம் 100 மடங்க அதிக வேகத்துடன் இருக்கும். இது, மிகவும் விரும்பப்படும், உறுதியான வேகத்தைக் கொடுக்கும். இதனால், ஒரு தரவின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், அது உடனுக்குடன் பதிவேற்றம் அல்லது பரிமாற்றம் செய்யப்படும்.

மிக அதிகமான தரவின் நிகழ்நேர ஸ்ட்ரீமிங் மூலம், 6G ஆனது இயந்திரத்திலிருந்து இயந்திரம் மற்றும் மனிதனிடமிருந்து இயந்திர தொடர்புகளை இதுவரை இல்லாத உயரத்திற்குக் கொண்டு சென்று, மெய்நிகர் மற்றும் மேம்படுத்தப்பட்டவற்றின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை மாற்றும் வகையில் அமையும்.

அனைத்துத் துறைகளிலும்..
மிக அபாயம் நிறைந்த தொழிற்சாலைகளில், ரிமோட் மூலம் பணிகளை மேற்கொள்வது, ஓட்டுநர் இல்லாத கார்கள், மனித உணர்வுகளோடு தொடர்புடைய ஸ்மார்ட் அணிகலன்களின் (வாட்ச் போன்றவை) இயங்கு தன்மை போன்றவற்றை 6ஜி தொழில்நுட்பம் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்.

இந்த தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது, பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தில் நிச்சயம் நல்லமுறையில் எதிரொலிக்கும், பொருளாதார நிலையில் பரிணாமத்தைக் கொண்டு வந்து, உலகளவில் மாற்றத்தை செய்யும். அதேவேளையில், 6ஜி என்பது அறிவார்ந்த தொலுல்நுட்பத்தில் நுழைந்து, நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் கம்பிவடமற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் அடங்கும்.

இந்தியாவில், 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்பது, சமூக கட்டமைப்பு மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்ப ஏற்படுத்தப்படும் பாலமாகவும், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், கிராமப்புற வெளியேற்றம் மற்றும் வெகுஜன நகரமயமாக்கலில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஒரு மாற்று விஷயத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது.

இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம்
இந்தியாவில் தற்போது 6ஜி தொழில்நுட்பம் என்பது மிகவும் தொடக்கநிலையில்தான் உள்ளது. தொலைநோக்கு அறிக்கையின் அடிப்படையில், நாட்டின் வலுவான ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலைப் பயன்படுத்தி புதுமைகளை வளர்ப்பதற்கும் புதிய யோசனைகளை நிறைவேற்றுவதற்கும் திட்டம் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், அரசுக்கு எந்த நிதிப்பற்றாக்குறையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் இந்த திட்டம் இரண்டு முறைகளில் நடைமுறைப்படுத்தப்படும். 2023 - 2025ஆம் ஆண்டுகளில் முதல் திட்டமாக அடிப்படை திட்டப் பணிகளை மேற்கொள்ளுதல், ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் மற்றும் மேம்படுத்துதல் மேற்கொள்ளப்படும்.

இரண்டாம் திட்டமானது 2025 - 2023ஆம் ஆண்டுகளில், முதல் திட்டத்தில் தொடங்கப்பட்டவற்றுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், 6ஜி தொழில்நுட்பத்துக்கான திட்டங்களை வகுத்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

இதர நாடுகளின் நிலை என்ன?
இதர வளர்ந்த பொருளாதார நாடுகளில், தொழில்நுட்பத்துக்கான திட்டமிடல் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. வட அமெரிக்காவில் கம்பிவடமற்ற தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களுக்காக நெக்ஸ்ட் ஜி அலையன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மூலம், அடுத்த தசாப்தத்திற்கு முன்னேறும் வகையில் விற்பனையாளர்கள் மூலம் தனியார் துறை - பல்கலைக்கழகங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு தொழில்நுட்ப சேவை வழங்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில், 6ஜி நெட்வொர்க் சுற்றுச்சூழலுக்கான வெள்ளை அறிக்கை ஐரோப்பிய விஷன் என்ற தலைப்பில், விரிந்துபரந்த கவனம் செலுத்தும் பகுதிகளை கோடிட்டுக் காட்டுகிறது.

ஜப்பானில், தி இன்னோவேட்டிவ் ஆப்டிகல் மற்றும் கம்பிவடமற்ற தொலைத்தொடர்பு குளோபல் அமைப்பானது, அதன் விஷன் 2030 வெள்ளை அறிக்கையை, நான்கு பரிமாணங்களில் உள்கட்டமைப்பு பரிணாமத்திற்கான முக்கிய தொழில்நுட்ப திசைகளுடன் வெளியிட்டுள்ளதில் அறிவாற்றல் திறன், பதிலளிக்கக்கூடிய தன்மை, அளவிடுதல் மற்றும் ஆற்றல் திறன் ஆகியவை அடங்கும்.

சீனாவில், 6ஜி தொழில்நுட்பம் குறித்த முக்கிய மேம்படுத்தும் திட்டங்கள் கண்டறியப்பட்டு, அவை பின்பற்றப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments