பள்ளிக்கல்வியில் மீண்டும் இயக்குநர் பதவி: முதல்வருக்கு ஆசிரியர் சங்கம்
நன்றி
பள்ளிக்கல்வி துறையில் மீண்டும் இயக்குநர் பதவியை உருவாக்கியதற்காக முதல்வருக்கு
ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்
தலைவர் செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2019-ம் ஆண்டு முந்தைய
அதிமுக அரசு பள்ளிக்கல்வித் துறையில் ஆணையர்என்ற புதிய பணியிடத்தை
அறிமுகப்படுத்தியபோது அதைஅனைத்து ஆசிரியர் அமைப்புகளும் எதிர்த்தன.
ஆணையர்பதவியை ரத்து செய்து பழையநிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் பதவி
உயர்வின் மூலம் நிரப்பப்படும் பணியிடமாக தொடர ஆணையிட வேண்டும் என்று முதல்வருக்கு
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கழகம் உள்பட பல்வேறு ஆசிரியர்
இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் கல்வி நலன், மாணவர் நலன்,ஆசிரியர் நலன் கல்வி
வளர்ச்சிஆகியவற்றை கருத்தில் கொண்டு நூற்றாண்டு பழைமை வாய்ந்த பள்ளிக்கல்வித்
துறையின் இயக்குநர் பணியிடத்தை மீண்டும் இயக்குநர் பணிடமாக மாற்றியதற்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு
நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments