ஆகஸ்ட் 29ம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

ஆகஸ்ட் 29ம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

29.08.2023 அன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
Click here to Download
நீலகிரி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

29-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய பொருட்டு செப்டம்பர் 16-ம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29-08-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

29-08-2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 23-09-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும.

சென்னை
ஓணம் பண் டிகையை முன்னிட்டு, ஆக.29- ஆம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அ ருணா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு ஆணைப்படி அறிவிக் கப்பட்டுள்ள இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக செப்.2- ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங் கள், கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகி றது.

இருப்பினும், உள்ளூர் விடுமு றைநாளான ஆக.29-ஆம் தேதி அவசர அலுவல்களைக் கவ னிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்
ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

கோவை
ஓணம் பண்டிகையையொட்டி, வருகிற 29-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இந்த அலுவலகங்கள் அடுத்த மாதம் 2-ந்தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments