இன்றைய கல்வி செய்திகள் 13.10.2023

 🛡️டிட்டோஜாக்  போராட்டம் பேச்சுவார்த்தை விளக்க கூட்டமாக ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெறும்.  

🛡️பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக இருந்த காகர்லா உஷா , சுற்றுலா மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக நியமனம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம்.

🛡️ஜாக்டோ -ஜியோ மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 18.10.2023 புதன்கிழமை மாலை 3 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து திருச்சியில் நடைபெற உள்ளது.

🛡️தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

🛡️அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் போட்டித் தேர்வுகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு. ஜே.இ.இ., நீட் மற்றும் யு.ஜி.சி., தேர்வுகள் 12 இந்திய மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. 

🛡️கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்- தமிழக அரசு அரசாணை வெளியீடு 

🛡️காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

🛡️ அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 20.10.2023 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி.



Post a Comment

0 Comments