இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம் - வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம் - வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்த நவீன காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகி விட்டது.
நம் கையடக்கத்திற்கே பரிவர்த்தனையானது வந்துவிட்டது. அந்த வகையில் வங்கி பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான ஒன்று நமது தொலைப்பேசி எண் தான். ஏதேனும் நம் கணக்கில் இருந்து பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக குறுஞ்செய்தியாக வந்துவிடும்.

அதுமட்டுமின்றி நமது தொலைபேசி எண் வைத்தே நம்முடைய அனைத்து வித தகவல்களையும் கூட எடுத்துக் கொள்ள முடியும். தற்பொழுதும் கூட பல ஊழல்கள் தொலைபேசி மூலம் நடந்து கொண்டு தான் உள்ளது. இது குறித்து காவல்துறையும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறது.குறிப்பாக எந்த ஒரு வங்கியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத வரை தங்களின் எந்த ஒரு தகவல்களையும் யாரிடமும் கூறக்கூடாது என்று அறிவுறுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது பாங்க் ஆப் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், அவர்களது டெபிட் கார்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வரும் 31ம் தேதிக்குள் தங்களது மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவ்வாறு இணைக்காவிட்டால் டெபிட் கார்டின் சேவை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பாங்க் ஆப் இந்தியா தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு சேவையை ரத்து செய்யாமல் இருக்க வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தங்களது மொபைல் எண்ணை இணைத்துக் கொள்வது நல்லது. இது உங்கள் பரிவர்த்தனையின் கணக்குகளை அறிய மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments