A to Z ல் WhatsApp தத்துவம் கடைபிடித்துப்பாருங்கள்

 இந்த 26 வார்த்தைகள்


எவ்வளவு அழகு படியுங்கள்......, தெரியும்.........


A - Appreciation  

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.


B - Behaviour  

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்


C - Compromise  

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.


D - Depression  

மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.


E - Ego  

மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.


F - Forgive  

கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.


G - Genuineness  

எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.


H - Honesty  

தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.


I - Inferiority Complex  

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன்?என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.


J - Jealousy  

பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.


K - Kindness  

இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.


L - Loose Talk  

சம்மந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.


M - Misunderstanding  

மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.


N - Neutral  

எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.


O - Over Expectation  

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.


P - Patience  

சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.


Q - Quietness  

தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.


R - Roughness  

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.


S - Stubbornness  

சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.


T - Twisting  

இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.


U - Underestimate  

மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.


V - Voluntary  

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.


W - Wound  

எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.


X - Xerox  

நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.


Y - Yield  

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.


Z - Zero  

இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.............




Post a Comment

0 Comments